ஐஸ்வர்யாராய் மகள் உடல்நிலை குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ – கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஏப்ரல்.21

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நிலை தொடர்பான ஆட்சேபனைக்குரிய வீடியோ பதிவை நீக்கும்படி ‘கூகுள்’ நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியரின் 11 வயது பெண் குழந்தையான ஆராத்யா பச்சன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக யு-டியூப்பில் சிலர் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். இதை எதிர்த்து, ஆராத்யா, அவரது தந்தை அபிஷேக் சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆராத்யா பச்சன் உடல்நலம் குறித்த வீடியோக்களை யூ-டியூப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும், ஒரு குழந்தையின் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *