சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூர், பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் அலுவலகத்திலும் நேற்று முன்தினம் சோதனை தொடங்கியது.
இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் இரண்டாம் நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனை 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள அந்நிறுவன இயக்குநர் பாலாவின் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடைபெறுகிறது. இதேபோல அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக்கின் அலுவலகத்திலும் சோதனை நீடிக்கிறது.