கொரோனாவை காட்டிலும் திக்விஜய சிங் மற்றும் கமல் நாத் மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தினர்.. சிவ்ராஜ் சிங் சவுகான்

கொரோனா வைரஸை காட்டிலும் காங்கிரஸின் திக்விஜய சிங் மற்றும் கமல் நாத் மாநிலத்துக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தினர் என்று மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேச நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துளசிராம் சிலாவத் அண்மையில் பேட்டி ஒன்றில், திக்விஜய சிங் காங்கிரஸின் கொரோனா வைரஸ். திக்விஜய சிங் அடுத்த பிறப்பு சீனாவில் இருக்க வேண்டும் என்று மகாகால் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, ஆமாம், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு நான்தான் கொரோனா வைரஸ் என்று துளசிராம் சிலாவத்துக்கு திக்விஜய சிங் பதிலடி கொடுத்தார். இந்நிலையில், காங்கிரஸின் திக்விஜய சிங் மற்றும் கமல் நாத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கிண்டலாக தாக்கினார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திக்விஜய சிங் ஒரு சரியான ஒப்பீடு செய்துள்ளார். அவர் ஒப்பீடுவதற்கு வேறு எந்த வைரஸையும் கண்டுபிடிக்காமல் கொரோனா வைரஸை மட்டுமே கண்டுபிடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் வாழ்வில் நாசத்தை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது கொரோனா வைரஸ். கமல் நாத் மாநில மக்களை கொரோனாவின் தயவில் விட்டுவிட்டார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியால் தான், ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. இன்று கோவிட்-19 முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் கோவிட்-19ஐ காட்டிலும் திக்விஜய சிங் மற்றும் கமல் நாத் இருவரும் மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் சேதத்தை விளைவித்துள்ளனர். மாநிலம் முற்றிலும் அழிக்கப்பட்டது. சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் கூட எதிர்மறையாக இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டமும் ஊழலும் அதிகமாக இருந்தன. கமல் நாத் அவரது ஒரு வருடத்துக்கு மேலான அரசாங்கத்தின்போது, மாநிலத்தை அழித்து சேதப்படுத்தினார். ஆனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மாநிலத்தை வரலாற்று சிறப்பு மிக்க வகையில் மேம்படுத்த முயற்சித்தது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *