மே.5
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் எதையும் செய்யவில்லை என்றும், தமிழ்நாடு அரசு அவர்கள் மீது பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கிறது என்றும் பேட்டி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இந்த வழக்கில் 6,7ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும் ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.