May13,2023
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை பிடிக்கிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சமூக வலைதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக செயல்பட்டார். அதே நேரத்தில் கர்நாடக தேர்தலுக்கான வார் ரூம் பொறுப்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் , தமிழகத்தை சேர்ந்தவருமான சசிகாந்த் செந்திலை காங்கிரஸ் நியமித்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதனையொட்டி, ஐஏஎஸ் சசிகாந்த் செந்திலிடம், ஐ.பி.எஸ் அண்ணாமலை தோற்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.