மே.19
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலைமச்சர் மு.க ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, கர்நாடகாவில் அடுத்த புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, நாளை பெங்களூருவில் முதலமைச்சராக சித்தராமையா பதயேற்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பதவியேற்பு விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கும் சித்தராமையா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.