இந்தியாவில் 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மே.25

இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான்நிகோபார் தீவுகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்தது. வீசிய அனல் காற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று வானிலையில் மாற்றம் காணப்பட்டது. வானம் பல இடங்களில் மேகமூட்டத்துடனும், சில இடங்களில் மழையும் பெய்தது.

இதற்கிடையே, இந்தியாவில் நிலவிவந்த வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று முதல் வானில் அவ்வப்போது மேகமூட்டம் காணப்படும் என்றும், கோடைகாலத்துக்கு முந்தைய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துளளது.

குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் கனமழை பெய்யும் என்றும், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மேற்கண்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான சூழல் தற்போது நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கவிருப்பதால், வட தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் வாரம் வரையிலும் 40 டிகிரி வெயில் கொளுத்தும் என வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *