May 28, 2023
‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின்: 2023-ம்ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனதுவேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, ‘கேலோ இந்தியா’போட்டிகளை நடத்த தகுதியான மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதற்காகபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.