June 01, 2023
பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் வடக்கு பாஜக எம்எல்ஏ ஆவார் என்று கூறி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
சிறந்த காரியகர்த்தாவாக இருப்பதற்காக ஜடேஜாவை தமிழக பாஜக மாநிலத் தலைவராக்க முடியுமா? அவரை ஆக விடுவ? என்று கேட்கிறார். அவர் மேலும், ஜடேஜா திறமையால் தமிழ்நாட்டின் இதயங்களை வென்றவர். தனது அரசியலுக்காக அல்ல. தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்கிறீர்கள் அண்ணாமலை. உங்கள் மோட்டார் வாயை யாரும் விரும்புவதில்லை. அண்ணாமலை உங்கள் முட்டாள்தனமான பேச்சுக்காக யாரையும் ஒப்பிட முடியாது என்கிறார்.
அதே நேரம், ஜடேஜாவை தமிழ்நாட்டின் மாநிலத் தலைவராக்கினாலும், அவரை வீழ்த்துவதற்காக அண்ணாமலை ஆடியோ வீடியோவை மார்பிங் செய்த புகைப்படம் செய்வார் என்று அண்ணாமலையை கடுமையாக விளாசுகிறார்.
காயத்ரியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. மோட்டார் வாயன் என்று அண்ணாமலையை சொன்னதால் பலரும் பாராட்டுகின்றனர். அண்ணாமலையை அப்படி விமர்சனம் செய்ததற்காக பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.