June 05, 23
செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் காற்றுடன் பெய்த மழையால், வெப்பம் தணிந்தது.
கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தபோதிலும், தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் பிற்பகலில் சட்டென்று வானிலையில் மாற்றம் ஏற்றப்பட்டது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கோயம்பேடு குறிப்பாக வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மாநகர் பகுதிகள் ஒருசில இடங்களிலும் மழை பெய்து வெப்பம் தனிந்துள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.