தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு, ஆன்லைன் வழியாக வரும் ஜூலை 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. பொறியியல் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரேண்டம் எண்ணை www.tneaonline.org இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே மாதியாக கட்ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.

மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வருகிற 26-ந் தேதி வெளியிடப்படும். மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு…

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *