முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் பேசியதை ஏற்க முடியாது – அமைச்சர் தங்கம் தென்னரசு

June 06, 23

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது ஜப்பானை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார் முதலமைச்சர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதனிடையே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்து இருந்தார். இது திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரை ஆத்திரமடைய வைத்துள்ளது. இதனை தொடர்ந்து திமுகவினர் ஆளுநருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளுநரின் விமர்சனம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக பயன்படுத்தி உள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. இவ்வாறு கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *