எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கிடைத்தது.

சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது

கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சாலைகள்  சீரமைக்க, ரூ. 300 கோடி மதிப்பிலும்,  மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும், 37 டெண்டர்கள் விடப்பட்டன.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வழக்கு ஒன்றை தொடாந்தது. அதில் இந்த டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி , மாநகராட்சி ஆணையராக இருந்த கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகார் மீது நடவடிக்கை எதுவும் இல்லை என்று அறப்போர் இயக்கம் மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் டெண்டர் ஒதுக்கியது தொடர்பாக நடந்துள்ள முதற்கட்ட விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.

இதனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கருத்து நிலவுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *