சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் எனும் புதிய ஆன்லைன் வழி படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜே.இ இ. உள்ளிட்ட எந்த வித நுழைவுத் தேர்வுகளும் இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் வாயிலாக பயில டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதை அடுத்து ஆன்லைன் வாயிலாக பயிலக் கூடிய பி.எஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம் எனும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் ஜூன் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
புதிய படிப்புப் பற்றி ஐ.ஐ.டி.யின் பேரரசியர்கள் குழு கூறியதாவது..
நமது நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எலட்ரானிக் பொருள்கள் பெரும்பாலும் சீனாவில் தயார் செய்யப்பட்டவை. அதனை மாற்றி இந்தியாவில் எலட்ரானிக் பொருட்களை தயார் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் பி.எஸ்.எலக்ட்ரானிக் சிஸ்டம் என்ற புதிய படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பை பொறுத்தவரை ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் கல்லூரிக்கு செய்முறை வகுப்பு மற்றும் தேர்வு எழுத மட்டும் வந்தால் போதுமானது.
12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை படித்த மாணவர்கள் இதில் சேரலாம். வயது வரம்பு கிடையாது.
மேலும் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி 6 முதல் 8 மாதம் படித்தால் சான்றிதழ் படிப்பாகவும் 2 ஆண்டுகள் படித்தால் டிப்ளமோ படிப்பாகவும் 4 ஆண்டுகள் படித்தால் பட்டப்படிப்பாகவும் எடுத்துகொள்ளபடும்.
படிப்பை முடித்தவர்களுக்கான வேலை வாய்பை ஐ.ஐ.டி. மையமே ஏற்பாடு செய்யும். பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு நாடு முழுவதும் 150 இடங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் படிப்பு படிக்க 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் டிப்ளமோ படிக்க 2,48,000 ரூபாய். பட்டப்படிப்பு படிக்க ரூ 5,84,000 ஆகும்.
இவ்வாறு ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் தெரிவித்தனர்.