June 20, 23
ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால கடந்த வாரம் கைது செய்யப்பட்டதால் அவர் வகித்து வந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
புதிதாக மின் துறை பொறுப்பை ஏற்ற தங்கம் தென்னரசு, சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமலுக்கு வரும் என்றார். உடனே செய்தியாளர் ஒருவர் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்று கேட்டார். அதற்கு அமைச்சர், இரண்டு ஆண்டுகள் வரை பிடிக்கும என்று பதிலளித்தார். உடனே செய்தியாளர் “”அதற்குள் திமுக ஆட்சியே முடிந்து விடும் போல இருக்கிறதே” எனறு பதில் கேள்விி போட்டார். கொஞ்சம் கோபமாக தங்கம் தென்னரசு அதன் பிறகும் ஆட்சி நீடிக்கும் என்ற பதிலளித்து செய்தியாளரின் வாயை மூடினாா.