தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் ஜுன் 22- ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது.
இது பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் சில்லறையில் மதுபானம் விற்பதற்கு 5329 கடைகளை நடத்தி வருகிறது. அவற்றில் 500 கடைகள் மூடப்பட்ட பின் மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 4729 ஆக குறைந்து விடும்.