விஜயின் லியோ பாடல் வைரலாகிறது.. ரசிகர்கள் கொண்டாட்டம்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ – லலித் குமார் தயாரித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் லியோ.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவான லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜயுடன் சேர்ந்து அனிரூத் மற்றும் அசல் கோளாறு பாடியுள்ளனர்.

நடிகர் விஜயின் பிறந்த நாளான இன்று அதிகாலை 12 மணியளவில் லியோ படத்தின் முதல் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலும் வெளியாகி இருக்கிறது.

இதற்காக காலை முதலே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விஜயின் லியோ போஸ்டரை பகிர்ந்து பாடலுக்காக காத்திருப்பதாக கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.

இதற்கு முன்னதாக ஆரம்பத்தில் லியோ படத்தின் முதல் புரோமோ வீடியோவை , அதாவது Bloody Sweet புரோமோ வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான நா ரெடி பாடலின் புரோமோ வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இருந்து லியோ படத்தின் அப்டேட்ஸ் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விஜயின் பிறந்த நாளன்று முதல் லுக் போஸ்டரையும், முதல் பாடலையும் வெளியிட்டது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *