இயக்குநர்களுக்கு உச்ச நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு.அதனை சரியாக பயன்படுத்தியவர்கள், புகழோடு காசும் பார்த்து விடுகிறார்கள். தவற விட்டோர், சுலபாக மீள்வதில்லை.

இந்த பட்டியலில் இடம் பெறுவோரில் முக்கியமானவர் வசந்த். கே.பாலசந்தரின் மாணவர். கேளடி கண்மணி, ஆசை ஆகிய அற்புதமான சினிமாக்களை தந்தவர். பாலசந்தர் தயாரிக்க ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பு முதலில் வசந்தைத்தான் தேடி வந்தது. பத்திரிகைகளில் விளம்பரமும் வந்து விட்டது.

ரஜினியுடன் ஏற்பட்ட மோதலால் அண்ணாமலையில் இருந்து வசந்த் விலக நேரிட்டது.அதன் பிறகே சுரேஷ்கிருஷ்ணா, இந்த படத்தை இயக்கினார்.இவரும் பாலசந்தரின் சிஷ்யர்தான்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகே சுரேஷ் கிருஷ்ணா, கோடம்பாக்கத்தில் பிரபலமானார்.இதற்கு முன்பு கமல்ஹாசனை வைத்து சத்யா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தாலும், அதன்பிறகு வாய்ப்புகள் குறைவாக இருந்தது.

அண்ணாமலைக்கு பின்னரே, வீரா, பாட்ஷா ஆகிய படங்களையும், சத்யராஜ், பிரபு, சரத்குமார் படங்களையும் மீண்டும் கமல் படத்தையும் இயக்கும் சான்ஸ் கிடைத்து, சம்பாதிக்க முடிந்தது.

இப்போது விக்னேஷ்சிவன் விவகாரத்துக்கு வருவோம்.

ரஜினி,விஜய் ஆகியோருக்கு நிகரான அஜித்தை வைத்து லைகா நிறுவனம் தயாரிக்கும்  படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பு விக்னேஷ் சிவனை  தேடி வந்தது.

கதையில் மாற்றம் செய்ய சொன்னார் அஜித். மறுத்து விட்டார் விக்னேஷ்.இதனால் அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். அவரது காதல் மனைவி நயன்தாரா, அஜித்திடமும், லைகா நிறுவனத்திடம் பேசியும்  பலன் இல்லை.

கதையை மாற்றுவதாக விக்னேஷ்சிவன் கூறியும் அதனை ஏற்க அஜித் மறுத்து விட்டார். இப்போது அஜித் படத்தை இயக்கும் பொன்னான வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்துள்ளது.இவர் தடம் படத்தை இயக்கியவர்.

அஜித்துக்கு ரெடி பண்ணிய கதையை விஜய் சேதுபதியிடம் சொல்லி, ஓகே வாங்கி இருக்கிறார், விக்கி.

— சினிமேன்

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *