பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்கவேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு தலைமைச்செயலர் இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர்கள் வராண்டா, வாகனத்தில் தூங்குகின்றனர். இரவு நல்ல தூங்கினால்தனே பகலில் சோர்வு இன்றி காரை ஓட்டமுடியும் என்பது கூட அவர்களை அழைத்துச் செல்கிறவர்களுக்குப் புரிவதில்லை. பாயோ, போர்வையோ இல்லாமல் கொசுக்கடியில் அவதிப்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் போராடும் டிரைவர்களால் மறு நாள் கார் ஒட்ட முடியாமல் தூங்கி வழிவதும் உண்டு.
இந்த சூழலில் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், சரியான தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
000