அரிசிக்கொம்பன் யானைக்கு காட்டு உணவுப் பிடிக்கவில்லை.. அரிசிக் கேட்டு அடம்.

அப்பர் கோதையாறு அருகே குட்டியாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை சரியான உணவு எடு்த்துக் கொள்ளாததால் உடல் நலக்குறைவுக்கு ஆளாகி மெலிந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இயற்கை ஆர்வலர்களை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் மயக்க ஊசிச் செலுத்தி கடந்த 5- ஆம் தேதி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை வனத்துறை அலுவலர்களால் லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம் களக்காடு வனத்திற்கு கொண்டு செல்லப்படட்து. இரண்டு நாள் கண்காணிப்பிற்குப் பிறகு அரிசிக்கொம்பனை கன்னியா குமரி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட அப்பர் கோதயைாறு அருகே அடர்ந்த காட்டில் விட்டனர். ரேடியோ காலர் எனப்படும் கருவி பொருத்தபட்டு இருப்பதால் அதனை வனத்துறை அலுவலர்கள் கண்காணிதது வருகின்றர்.

இதன் பிறகு அரிசிக்கொம்பன் மற்ற யானைக் கூட்டத்தோடு சேராமல் தனியாகவே நடமாடுகிறது.யானைகள் பொதுவாக ஒரே இடத்தில் இருக்காமல் தினமும் பல கிலேமீட்டர் தொலைவுச் செல்லும் பழக்கம் கொண்டது. ஆனால் அரிசிக்கொம்பனை எந்த வனத்தில் விட்டனரோ அங்கே தான் சுற்றி வருகிறது. காட்டில் கிடக்கும் மூங்கில் போன்ற தாவரங்களையும் அது உண்பதில்லை. இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட லேசாக இளைத்து விட்டதாக அதைக் கண்காணித்து வரும் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.  எனவே அதனை மீண்டு்ம் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் சுற்றி வந்த அரிசிக்கொம்பன், குடியிருப்புக்குள் நுழைந்து வீடு, கடை போன்ற இடங்களில் அரிசியை திண்று பழக்கப்பட்டதாகும்.  இதனால்தான் அதற்கு அரிசிக்கொம்பன் என்ற பெயர் ஏற்பட்டது. அதனால் தாக்கப்பட்டு இதுவரை  8 பேர் இறந்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

அந்த அரிசி சுவையால்தான் அதற்கு காட்டு உணவுப் பிடிக்கவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *