சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சான் இதுவரை நேரடி தமிழ் படம் எதிலும் நடித்ததில்லை.

கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வானன் டைரக்‌ஷனில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என்ற தமிழ் படத்தில்அமிதாப்பச்சன் நடிப்பதாக இருந்தது.ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை.

முதன் முதலாக தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த படத்தில் நடிக்கிறார், அமிதாப்.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜெயிலரில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்,கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில்,இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால்சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ரஜினி பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இதனையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.இது, ரஜினியின் 170 வது படம். ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் டைரக்டு செய்கிறார்.

போலி என்கவுண்டர்களை மையப்படுத்தி உருவாரும் இந்த படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார்.

இதில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். பிளட்ஸ்டோன் எனும் ஒரே ஆங்கிலப்படத்தில் நடித்துள்ள ரஜினி,சில இந்திப்படங்களிலும் நடித்திருக்கிறார்.அமிதாப் படங்களும் இதில் அடக்கம்.

கடைசியாக ரஜினியும் அமிதாப்பும் ‘ஹம்’ என்ற இந்திப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். 1991 ஆம் ஆண்டு இந்தப்படம் ரிலிஸ் ஆனது.

கமல்ஹாசன்

நடிகையர்திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின், அடுத்து இயக்கும் புதிய தெலுங்குப் படம் ‘ப்ராஜெக்ட்-கே’.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகும் சயின்ஸ்ஃபி்க்‌ஷன் படம் இது.

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தில் நம்ம ஊர் கமலஹாசனும் இணைந்துள்ளார். இதனை படத்தை தயாரிக்கும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் வில்லனாக நடிக்கும் கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்.

கமலும் அமிதாப்பும் ஏற்கனவே கர்பாதர்,கெராஃப்தார் ஆகிய இந்திப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
– வேந்தன்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *