ஜூன் 28
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்ஹாவில் தொழுகைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
இந்த மலை மீது சிக்கந்தர் தர்ஹா அமைந்துள்ளது. அதனால் இதனை இஸ்லாமியர்கள், சிக்கந்தர் மலை என அழைத்து வருகின்றனர். இங்கு தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நாளை பக்ரீத் பண்டிகை என்பதால் தொழுகை நடத்த இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மலைக்கு மேல் தானே தர்ஹாவும் அமைந்துள்ளது, அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.