அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்
இதனை விளக்கி அவர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது..
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்தது தொடர்பான தங்களுடைய கடிதம் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.அது குறித்து சட்ட நுணுக்கங்களை உங்களுக்கு தெளிவுபடுத்த இந்த கடிதத்தை எழுத நேரிட்டுள்ளது.
நீங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அலட்சியப்படுத்தி அவசரப்பட்டுச் செயல்பட்டுள்ளீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கையாளும் போது ஆளுநர் போன்ற உயர் அரசியலமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்.
நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நபரே சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். ஆனால் செந்தில் பாலாஜி அமலாக்க துறை விசாரணைக்காக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. எனவே செந்தில் பாலாஜி மீதான தங்கள் நடவடிக்கை புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.
இவ்வாறு ஸ்டாலின் கடித்தில் குறிப்பிட்டு உள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ரவி வியாழக் கிழமை மாலைஅறிவித்தார். இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். ஆளுநரின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தன.
இந்த தகவல் வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்வதற்கு முன்பு சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டு்ப் பெற வேண்டும்.எனவே இது சரியான முடிவு அல்ல என்று ஆளுநரை கண்டித்தாக தெரிகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக நேற்று இரவே ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.
000
000