மெர்க்கண்டைல் வங்கி மீது புகார், பல நூறு கோடிக்கு கணக்குக் காட்டவில்லை என குற்றச்சாட்டு.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன..

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மெர்க்கண்டைல் வங்கிக்கு  இந்தியா முழுவதும் 500- க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன

இந்த வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பித்து இரவு வரை வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கடந்த ஐந்து வருடக் கணக்குகளை ஆய்வு செய்த போது நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது

ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2,700 கோடி ரூபாய், டிவைடெண்ட் முதலீட்டில் 200 கோடி ரூபாய், பங்குகளில் 600 கோடி ரூபாய், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டிகளில் 500 கோடி ரூபாய்,  கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு டிவைடெண்ட் முதலீட்டில் 200 கோடி ரூபாய்  ஆகியவற்றுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதன்படி கணக்கு காட்டாத மொத்த தொகையின் மதிப்பு 4,410 கோடி ஆகும்.

இதுபற்றி உரிய விளக்கங்களை கொடுக்குமாறு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாகத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உள்ளது. அதன் பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை தெரியவரும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *