சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பின்னர் அகற்றபப்பட்டது சர்ச்சையாகி வருகிறது.
இது குறித்து மருத்துவமனை முதல்வர் தேரனி ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
குழந்தை குறை மாதத்தில் பிறந்தது. தலையின் சுற்றளவும் அதிகமாக இருந்தது. அதனால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட போது தலையில் நீர் கோர்த்திருப்பது தெரியவந்தது. எனவெ தலையில் விபி ஸ்டன்ட் என்ற லூப் பொருத்தி வயிற்று பகுதியை இணைக்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அந்த டியூப் சில நாட்களில் வெளியேறிவிட்டதுதான் பிரச்சினைக்கு காரணம்.
அதன் பின் நரம்பியல் துறையின் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டது. குறை பிரசவத்தில் பிறந்ததால், ரத்த ஒட்டம் குறைவாக இருந்ததால் கையில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துறை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில அறுவை சிகிச்சை மூலம் கை அகற்றப்பட்டது
இது தொடர்பாக 3 மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரித்து வருகிறது. இந்தக் குழு செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்குள் விசாரணை அறிக்கையை வழங்கும்.
இவ்வாறு தோனி ராஜன் தெரிவித்தார்.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த முகமது தஹீர் என்கிற குழந்தை குறை மாதத்தில் பிறந்துள்ளார். அவருக்கு இருதயத்தில் கோளாறு, மூளையில் நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது. அதனுடன் பிறக்கும்போதே சாதாரண குழந்தையை விட 1. 5 கிலோ என்கிற பாதி எடையில் இருந்துள்ளார்.
மூளை பிரச்சனை காரணமாக தேவகோட்டையில் இருந்து பலமுறை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளார் அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குழந்தைக்கு உடலில் ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவி கடந்த மாதம் ஐந்தாம் தேதி மலத்துளையின் வழியாக வெளியே வரவே அந்த சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஒன்றாம் தேதி குழந்தையின் கையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் கையில் ரத்தக்குழாய் அடைப்பு இருப்பதால் கையை அகற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது அதனால் கையை அகற்றி மருத்தவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் .
குழைந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பை கண்டறிய பெற்றோர்களின் சார்பில் அவர்கள் மூலமே பரிசோதனை செய்து கொள்ளட்டும், அதற்கான செலவை அரசே ஏற்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் அலட்சியம் என்ற முறையில் குறை கூறுவது தவறு. அரசு மருத்துவமனை என்றாலே ஏதோ சலுகை கிடைக்கும் என சிலர் நினைக்கின்றனர்.
குழந்தை இறந்து விட்டது போன்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டியளிக்கிறார், மக்கள் சேவை ஆற்றிக் கொண்டிருக்கின்ற சுகாதாரத் துறைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.
குழந்தை விவகாரத்தில் கவனக் குறைவு என்று நீங்களே முடிவு பண்ணக்கூடாது. நீங்கள் மருத்துவர் கிடையாது, குழந்தை விவகாரத்தில் சொல்லும் அத்தனை பேரும் மருத்துவர்கள் கிடையாது,
தற்போது விசாரணை செய்தி கொண்டிருக்கிறார்கள். கவனக் குறைவு இருப்பதைக் கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனிடையே குழந்தையின் பெற்றோர் தவறான சிகிச்சையால் தங்கள் குழந்தையின் கை அகற்றக் காரணமாக இருந்தவர்கள் மீது நடடிவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.
000