ஜூலை, 13-
சென்னையில் திருட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய 24 வயது இளைஞர் உயிர் இழந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் நல்லான் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை எம்ஜிஆர் நகர் போலீசார், வீடு ஒன்றில் இருந்து நகை காணமல் போனது தொடர்பாக புதன்கிழமை அன்று அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.
பிறகு ஶ்ரீதரை இன்று ( வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
விசாரணைக்கு பின் வீட்டுக்கு வந்த ஸ்ரீதருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கே.கே நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுதான் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
அவருடைய உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..
போலீசாரின் சித்தரவதையால் ஸ்ரீதர் உயிர் இழந்ததாக புகார் எழுந்து உள்ளது. பிரேதப்பரிசோதனைக்கு பிறகே உயிர் இழந்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
உண்மையை யார் அறிவாரோ?