ஜெயிலர் படத்தின் அடுத்த பாடல்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை , கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்துள்ளார்.

மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ,தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் என  பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளது.

முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ள ரஜினி , அதிரடி சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.’ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் அண்மையில் வெளியாகி யூடியூபில் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.காவலா பாடல் போல் இதுவும் கலக்கலாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *