தக்காளி விளையும் நிலத்தில் தங்கம் கிடைக்குமா?
விவசாயி ஒருவருக்கு கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இன்னும் சில நாட்களில் 300 ரூபாயை எட்டும் என பகீர் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளார்.
அவர் பெயர் துக்காராம் பாகோஜி . புனே மாவட்டம் ஜுன்னார் கிராமத்தை சேர்ந்தவர்.
அங்கு அவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், அவர் 12 ஏக்கரில் தக்காளி விளைவித்து வருகிறார்.இப்போது தங்கம் ரேஞ்சுக்கு தக்காளி விற்கப்படுவதால், துக்காரம் வீட்டு கூரையை பிய்த்து கொண்டு பணம் கொட்டுகிறது.\
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் 13 ஆயிரம் பெட்டிகளுக்கு தக்காளிகளை அறுவடை செய்து சந்தைப்படுத்தியுள்ளார். ஒரு பெட்டிக்கு அதன் எடையைப் பொறுத்து 1,000 ரூபாய் முதல் .2,400 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்றுள்ளார்.
இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவருக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 900 பெட்டிகள் தக்காளிகளை விற்பனை செய்து .18 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
துக்காராம் மட்டுமல்லாமல், ஜுன்னார் கிராமத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் பலரும் ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளனர்.
ஜுன்னார் கிராமத்தை இனி தங்க வயல் என அழைக்கலாம்
000