வலை தளத்தில் வைரலாகும் ’ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாடல்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த், நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப்படம்  அடுத்த மாதம் 10-ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது

‘எந்திரன்’, ‘பேட்ட’ ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 4-வது முறையாக ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனால், படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவான ‘வா நூ காவாலய்யா’ என்று தொடங்கும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல், கடந்த 6- ம் தேதி வெளியானது. ரஜினிகாந்த், தமன்னா இணைந்து நடித்த இந்தபாடல் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில், 2-வது பாடலான ‘ஹுக்கும்… டைகர் கா ஹுக்கும்’ என்ற பாடல்,நேற்று .வெளியானது.இந்த பாடலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாடலை வெளியிடும் முன்பு இது குறித்து வீடியோ மூலம் சன் பிக்சர்சஸ் அறிவிப்பு வெளியிட்டது.

அதில்‘ஹேய், இங்க நான் தான் கிங். இங்க நான் வச்சது தான் ரூல்ஸ். அந்த ரூல்ஸை நான் அப்பப்போ என் இஷ்டத்துக்கு மாத்திக்கிட்டே இருப்பேன். அதை கப் சிப்புனு கேட்டு ஃபாலோ பண்ணனும். அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ண நினைச்ச…. உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சி போட்டுடுவேன். ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்’. எனபேசி துப்பாக்கியை வைத்து ரஜினிகாந்த் மிரட்டும் காட்சிகள், இந்த புரோமோவில் இடம் பெற்று, பலத்த வரவேற்பை அள்ளிக்கொண்டு இருக்கிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *