பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களின் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த தீவிரவாதிகள் ஐந்து பேரை போலிசார் சுற்றி வளைத்து கைது செய்து
ஹெப்பால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த ஐந்து பேருமே உள்ளூர் வாசிகள்தான். இவர்களிடம் இருந்து 7 நாட்டுத் துப்பாக்கிகள், 45 துப்பாக்கி குண்டுகள், வாக்கி டாக்கி சாதனம், உள்ளிட்வை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பெங்களூர் மாநகர குற்றப்பிரிவுப் போலிசார் இந்த ஐந்து பேரின் வீடுகளை சோதனை செய்த போது மேற்கண்ட பொருட்கள் சிக்கின.
தீவிரவாதச் செயல்களில் ஈடுபட இருந்த ஐந்து பேரும் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள். கொலை,கொள்ளை, செம்மரம் கடத்தல் மற்றும் திருட்டு போன்ற குற்றங்களை செய்தவர்கள் ஆவர். விசாரணையில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்ததை ஒப்புக் கொண்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேருடன் மேலும் சிலருக்கும் இந்த செயல்களின் தொடா்பு இருப்பதையும பெங்களூரு போலிசர் கண்டறிந்து உள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றம் ஐந்து பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடடு உள்ளதால் அனைவரும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலிசர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதனிடையே தீவிரவாத தொடர்பு உடைய கைது என்பதால் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கு விசாரணையில் இறங்கக் கூடும் என்று தெரிகிறது.
000