ஆகஸ்டு,10-
ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிப்பு மட்டுமின்றி, இயக்கத்திலும்முத்திரை பதித்தவர். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இப்போது அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அவரே கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அர்ஜுனும் முக்கிய வேடத்தில்நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.
நடிகர் அர்ஜுன், தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்த திட்டமிட்டார். தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் -ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் படத்தை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார் விஷ்வக் சென் – அர்ஜுன் இடையே பிரச்சினை ஏற்பட்ட.தால் அந்த படம் நின்று போனது.