மே.21 வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்Continue Reading

மே.21 சென்னை கோவளத்தைச் சேர்ந்த அலைச்சறுக்கு விளையாட்டு வீரர் இராஜசேகர் பச்சை என்ற இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. 27 வயது இளைஞரான இவர், கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, அடிவாரத்திற்கு திரும்பிContinue Reading

மே.21 கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக ஜமேசா முபின் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் வெடிமருந்துகளை வாங்கியதாக என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, கோவை கோட்டைமேடு கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஜமேசா முபின் என்பவர் ஓட்டிச் சென்ற கார் வெடித்தது. இதில் ஜமேசா முபின் உயிரிழந்தார். இவ்வழக்கில், முபின் உறவினர்கள்Continue Reading

மே.21 தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மே 27ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருங்கருணை மற்றும் இ.கே.ஆர்.குப்பம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் மது அருந்திContinue Reading

மே.20 கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே.13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. அதன்படி, கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.Continue Reading

மே.20 தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன்,Continue Reading

மே.20 கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்களாக நடைபெற்றது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி,Continue Reading

மே.20 தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜீவ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு புதியதாக டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தோ திபெத் எல்லை படையின் ஏடிஜிபி ஆக உள்ள ராஜீவ் குமாருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு போலீஸ் பயிற்சி அகாடெமியின்Continue Reading

மே.20 ரஷ்ய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வரும் 23ம் தேதி சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, சீன அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரின் ஆரம்பத்தில் இருந்தே சீனா, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. ஒன்றரை ஆண்டாக போர் நீடித்து வரும் நிலையில், அதனை நிறுத்துமாறு உலக நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதாக சீனாவும் உறுதியளித்தது.Continue Reading

மே.20 ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி7 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அரசுமுறை பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கீனி ஆகிய 3 நாடுகளுக்குContinue Reading