மே.10 தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதோடு, வழக்குகளின் நிலுவையும் உயரும் நிலை உருவாகியுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால், அன்றாட நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வழக்குகளில் சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு, இடைக்கால உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளை தயார்Continue Reading

மே.10 மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து கோரும் ‘மெய்தி’ இன மக்களுக்கு எதிராக பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டத்தால் கலவரம் வெடித்தது. இதையடுத்து, மணிப்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கலவரத்தை ஒடுக்க ராணுவமும் வரவழைக்கப்பட்டது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரிவருகின்றனர். இவர்களுக்கு அந்த தகுதியை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் இரு தரப்பினரிடையேContinue Reading

மே.10 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாறவுள்ளதைக் குறிக்கும் வகையில், தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.Continue Reading

மே.10 கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி, பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுககான பிரச்சாரம் தீவிரமானது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகியContinue Reading

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மே.9 தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ்டுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30Continue Reading

மே.9 தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னைContinue Reading

மே.9 தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை 2021ம் ஆண்டு மே 7-ம் தேதி ஆட்சி அமைத்தது. பதவியேற்ற ஓராண்டுக்குள் அமைச்சரவையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வரிசையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைContinue Reading

மே.9 கோவையில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். கோவை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க இந்த டிரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது கோவை காவல் பயிற்சிContinue Reading

மே.9 நாட்டின் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உட்பட 4 மொழிகளில் அண்மையில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் இந்தத் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.Continue Reading

மே.9 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டஙகளில் சுமார் 10 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகள் மற்றும் என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையர்வர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாகContinue Reading