மே.9 கோவை வெள்ளியங்கிரி மலையின்‌ சுற்றுச்கழலை பாதுகாக்கும்‌ நோக்கத்தில்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படும்‌ வருடாந்திர தூய்மை‌ பணிகளில் சிவாங்கா பக்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் இந்திய கடற்படை அதிகாரிகளும்‌ இணைந்து தூய்மைப்‌ பணியில்‌ ஈடுபட்டனர்‌. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை வரலாற்று சிறப்பும்,‌ ஆன்மீக முக்கியத்துவமும்‌ வாய்ந்தது. சிவனே வந்து அமர்ந்து சென்றதால்‌ இம்மலை தென்‌ கயிலாயம்‌ எனவும்‌Continue Reading

மே.9 திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின தங்க கோபுரத்தை விதிமுறைகளை மீறி பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தற்போது கேள்விContinue Reading

மே.9 கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கர்நாடகத்தில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நாளை (மே.10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிContinue Reading

மே.8 நெல்லை கூடங்குளத்தில் பராமப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக 2வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்,Continue Reading

மே.8 சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ-மாணவியரில் 94.03 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6Continue Reading

மே.8 டெல்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர்கள் மேற்கொண்டுவரும் 2ம் கட்டப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் ஏராளமானோர் டெல்லிக்கு படையெடுத்த நிலையில், அவர்களை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் 2 ஆம்Continue Reading

மே.8 நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு தோல்வி பயத்தால் புதுச்சேரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் என்னும் உயிர்க்கொல்லி தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்குContinue Reading

மே.8 ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாகContinue Reading

மே.8 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை (மே.9) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றுContinue Reading

மே.8 தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மே 10ம் தேதி முதல் 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டில் மே மாதம் 10 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை 15 நாட்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி,Continue Reading