மே.8 கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 6500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடுவீடாக தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் கோடை மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம். அப்படி மழைநீர் தேங்கும் பட்சத்தில், அங்கு டெங்கு கொசு புழுக்கள் வளரContinue Reading

மே.8 கேரள மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணிகளுன் சுற்றுலா படகு சென்றது. நேற்று மாலை 7 மணியளவில் இந்த படகானது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில்Continue Reading

மே.8 கர்நாடகாவில் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. கர்நாடகாவில் 224 தொகுதிகளை கொண்ட சட்டப் பேரவைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மாதம் 24-ந் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமாகத் தொடங்கியது. அதன்படி, பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும்Continue Reading

மே.6 தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதனால், அப்பகுதிகளில் மே 7 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், மே 8 ஆம் தேதியில்Continue Reading

மே.6 தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 8-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வி துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்Continue Reading

மே.6 நான் ஒரு பைசா ஊழல் செய்துள்ளதாக நிரூபித்துவிட்டால்கூட என்னை பகிரங்கமாகத் தூக்கிலிடுங்கள் என பிரதமர் நரேந்திரமோடிக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்Continue Reading

மே.6 சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொண்டார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் செயல்பட்டுவரும் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கடந்த ஏப்.3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிணைContinue Reading

மே.6 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் சொந்த மண்ணில் 2-வதுContinue Reading

மே.6 இரு நாட்டு எல்லை பகுதியில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்பட வாய்ப்பில்லை என சீனாவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாள் மாநாடு நடைபெற்றது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லவ்ரவ், சீன வெளியுறவுContinue Reading

மே.6 கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட புரூக்பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கை முற்றுகையிட முயன்ற போது தமுமுக-வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தி மொழியில் நேற்று திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முஸ்லிம்Continue Reading