ஜூன்.3 ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதுவரை பலி எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900-த்தை கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அமைச்சர்கள் உதயநிதி, எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலானContinue Reading

ஜூன்.3 ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900ஐத் தாண்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாலிருநது சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணிகளுடன் புறப்பட்டது. நேற்று இரவு சுமார் 7 மணி வாக்கில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே அந்த ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதேபாதையில்Continue Reading

ஜூன்.2 சென்னையில் 25 ஏக்கர் பரப்பளவில் 5ஆயிரம் பேர் அமரும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கலைஞர் கன்வென்சன் சென்டர் என்ற பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்கContinue Reading

ஜூன்.2 இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் 1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி ஞானதேசிகன் என்னும் இளையராஜா பிறந்தார். தமது 14வது வயதில், அவரின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக் குழுவில் சேர்ந்த இளையராஜா, கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரைப்பட உலகை தமது தவிர்க்க இயலாதContinue Reading

ஜூன்.2 கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் 8-வது நாளாக சோதனை நடத்திவருவதால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது- கரூரில் கடந்த 26ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். அப்போது, வருமானவரித்துறையின் சோதனைக்கு கரூர் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தContinue Reading

ஜூன்.2 தமிழகத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகள், குடோன்களை அரசு தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு தமது டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பதிவில், சர்க்கார் கொல்லப்பட்டி விபத்தில் காயமடைந்த மேலும்Continue Reading

ஜூன்.2 இந்தியாவில் அரசுமுறை பயணமாக வந்துள்ள நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகளிடையே வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த 31ம் தேதி டெல்லி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவி ஏற்ற பின்னர், அவர் இந்தியாContinue Reading

ஜூன்.2 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முனனாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு அவரது 100-வது பிறந்த நாள் என்பதால், தமிழகம் முழுவதும் திமுக சார்பில்Continue Reading

ஜூன்.2 தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும்Continue Reading

ஜூன்.1 சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு, நேற்றிரவு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமானநிலையத்தில் திமுகவினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறைப் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார். சென்னைContinue Reading