மே.2 இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய விதிகளை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏடிஎம்.-ல் பணம் எடுக்க இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக இருந்தாலும், முதலில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஎம் மையத்திற்குச் சென்றாலும், வங்கி கணக்கில் உள்ளContinue Reading

மே.2 தமிழகத்தில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன.Continue Reading

மே.2 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள பஞ்சலிங்க அருவியில் மே தினம் விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறையைக் கொண்டாட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில்Continue Reading

மே.1 தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடுContinue Reading

ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை

மே.1 தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழி வகை செய்யவில்லை என கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் அடுத்த தலைமுறையை தாண்டி விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டContinue Reading

மே.1 தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதவி காலம் முடிவதை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் தலைவர்Continue Reading

மே.1 தமிழகத்தில் வேலூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டியெடுத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்Continue Reading

மே.1 கேரளா மாநிலம் திருச்சூரில் உலக பிரசித்திபெற்ற பூரம் திருவிழா நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் வருடம்தோறும் நடத்தப்படும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த திருவிழாவில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து தொடங்கி, திருவம்பாடி பகவதி அம்மன்Continue Reading

மே.1 மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமானContinue Reading

மே.1 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தின் பர்ஸ்டலுக் வெளியாகியுள்ளது. அதில், கதை நாயகனான உதயநிதி ஸ்டாலின் வாளுடனும், நடிகர் வடிவேலு அரசியல்வாதி கெட்டப்பிலும் மாஸ் காட்டியுள்ளனர். தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்ற பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தயாரித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தற்போது மாமன்னன் படத்தை இயக்கியள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை, ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.Continue Reading