மே.1 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பரப்புரையானது மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிடுகிறார். பெங்களூருவில் உள்ள கட்சி தலைமையகத்தில்Continue Reading

ஏப்ரல்.29 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக நடுக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.Continue Reading

ஏப்ரல்.29 இங்கிலாந்து நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் இறப்புக்களைத் தடுக்க புதிய யுக்தியை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பால் ஆன்லைன் சூதாட்டப்பிரச்னை பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இங்கிலாந்திலும் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்வகையில், இங்கிலாந்து அரசு பொதுமக்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் என யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் புதிய சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி,Continue Reading

ஏப்ரல்.29 வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம் வரும் மே 6-ம் தேதி நேரில் சென்னை விசாரணை நடத்தவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டContinue Reading

ஏப்ரல்.29 தமிழகத்தில் உள்ள வணிகவளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (ஏடிஎம்) மூலம் மது விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இந்த விற்பனைக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்படும் புகார்களைContinue Reading

ஏப்ரல்.29 சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன் என்று என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருகமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு ஜெயந்தி விழா விஜயவாடா போரங்கி அனுமோலு கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”உங்கள் அனைவரையும் பார்க்கும்போதுContinue Reading

ஏப்ரல்.29 இந்தியாவில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்களை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 84 மாவட்டங்களில் புதிதாக எப்.எம்.ரேடியோ நிலையங்கள் நிறுவப்பட்டன. எல்லைப்புற பகுதிகள் மற்றும் மிகவும் உட்புற பகுதிகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 3ஆயிரத்து 500 சதுர கிலோContinue Reading

ஏப்ரல்.29 கோவை – அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை, சேலம் மண்டல பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கப்பட்ட பின்பு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டுContinue Reading

ஏப்ரல்.29 நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வந்த மசினி என்ற பெண் யானை தாக்கியதில், பாலன் என்ற பாகன் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை தாக்கி கொல்லும் யானைகள் மற்றும் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் இந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2006ஆம்Continue Reading

ஏப்ரல்.29 மே. 1ம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 3 நாள் தொடர் விடுமுறை என்பதல், கோவையிலிருந்து வெளியூர் செல்ல சுமார் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறையையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து நிலையில், கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது.Continue Reading