ஏப்ரல்.28 தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்து இரண்டு கட்சிகள் நீக்கப்பட்டதோடு, புதிதாக ஒரு கட்சி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மாநிலக் கட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே, தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்குContinue Reading

ஏப்ரல்.28 பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் நடத்தும் சைபர் கிரைம் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், இந்திய ராணுவத்தில் நிபுணர்கள் அடங்கிய புதிய பிரிவைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவும் அச்சுறுத்தல்கள் இந்தியாவுக்கு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதேபோல், சீனாவும் தன் ராணுவ பலத்தை பயன்படுத்தி மிரட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, சைபர் எனப்படும்Continue Reading

ஏப்ரல்.27 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்துContinue Reading

ஏப்ரல்.27 வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி மோசடி செய்த மாற்றுத்திறனாளி நபர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு, தான் ஆசியகோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில்Continue Reading

ஏப்ரல்.27 திருவாரூரில் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம்Continue Reading

ஏப்ரல்.27 டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தமிழகத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்தது. இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து, ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தContinue Reading

ஏப்ரல்.27 ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி மே மாதம் ஜப்பான் செல்கிறார். ஹிரோஷிமா நகரில் மே 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் வளர்ந்த நாடுகளின் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். இந்தியாவுக்கு கடந்த மாதம் வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில், அமெரிக்க ஜனாதிபதிContinue Reading

ஏப்ரல்.27 கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்து மாம்பழங்களையும் உடன் எடுத்துச்சென்றார். கோவையிலிருந்து விமானம் மூலம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் சென்றனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இதையொட்டி, கோவை விமான நிலையத்திற்கு வந்த ஈபிஎஸ்-க்குContinue Reading

ஏப்ரல்.27 உடுமலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ தக்காளி 2 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உடுமலையில் 40Continue Reading

ஏப்ரல்.27 தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஆண்டுதோறும் கூடுதலாகContinue Reading