ஏப்ரல்.26 ஈரோடு,கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டியெடுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பரவலாக மழையும் பெய்தது. இதனிடையே, நேற்று ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக வானிலைContinue Reading

ஏப்ரல்.26 ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாகக் கொடுத்து முகேஷ் அம்பானி அசத்தியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் மனோஜ் மோடி. இவர் முகேஷ் அம்பானியின் ஆரம்பக் கால நண்பர் ஆவார். முகேஷ் அம்பானியும், மனோஜ் மோடியும் மும்பை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கெமிக்கல் டெக்னாலஜி பயின்றவர்கள். 1980-ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்த மனோஜ்Continue Reading

ஏப்ரல்.25 இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடத்தால் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும். அந்த வகையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று இந்தோனேசியாவில் இரண்டு முறை சக்திContinue Reading

ஏப்ரல்.25 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 2,613 வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். கடந்தContinue Reading

ஏப்ரல்.25 தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போதுContinue Reading

ஏப்ரல்.25 தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே.18ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் பிரிவு, ஓசிContinue Reading

ஏப்ரல்.25 கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பென்சில் முனையில் முகக்கவசத்தை செதுக்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை காந்திபார்க் பகுதியில் பென்சில் முனையில் முகக்கவசம் போன்ற சிற்பம் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கோவையில் கொரோனாContinue Reading

கோவையில் பேருந்து சிறைபிடிக்கும் போராட்டம்

ஏப்ரல்.25 சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து நாளை கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள மாநில அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுவாணி அணைக்கும் செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடிContinue Reading

கூலாங்கல் ஆற்றில் வெள்ளம் - சுற்றுலாப்பயணிகள் மீட்பு

ஏப்ரல்.25 கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் கூலாங்கல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக பிற்பகல் நேரங்களில் எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது. பிற்பகலுக்குப்Continue Reading

ஏப்ரல்.25 கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், கிராம செவிலியர்கள் மூலம் 12 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 70-ஐ கடந்துள்ளது. மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. இந்த கொரோனா தொற்றானது, கர்ப்பிணிகள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் மற்றும்Continue Reading