ஏப்ரல்.25 சென்னை – கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சேவைகள் மற்றும் பயணிகளின் வசதி குறித்து அறிய ஈரோடு வந்த மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, பாஜக ஓ.பி.சி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். கோவை – சென்னை இடையே இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தContinue Reading

ஏப்ரல்.25 கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா 4 லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு 1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த கைத்தறிவு உதவி இயக்குனர் சிவகுமார், சிறுமுகை பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் உறுதி கூறி உள்ளதாகவும், முதற்கட்ட பணிகள் இந்தContinue Reading

ஏப்ரல்.24 தமிழகம் முழுவதும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். கோவை,சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர், ஹைதரபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் குரூப்ஸ். குறிப்பாக இந்த நிறுவனம் நிலங்களை வாங்கி குடியிருப்புகளாக கட்டி விற்பனை செய்வதையும், நிலங்களாகவும் விற்பனை செய்வதையும்Continue Reading

ஏப்ரல்.24 நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர் விடுமுறையையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரம்ஜான் மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கர்நாடகா கேரளாவிலிருந்து சொந்த வாகனங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்ததால், காலை முதலே நகரில் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள்Continue Reading

ஏப்ரல்.24 கோவை – அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இதுவரை 280க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.Continue Reading

முதியவருக்கு உதவி -பாஜகவினருக்கு பாராட்டு

ஏப்ரல்.24 பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 76 வயது முதியவருக்கு முகச்சவரம் செய்து, குளிப்பாட்டி, உணவளித்து, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில் கடந்த 9 நாட்களாக ஆதரவற்று படுத்து கிடந்துள்ளார். இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை மாவட்டContinue Reading

ஓ.பி.எஸ். வேட்பாளர்கள் வாபஸ்

ஏப்ரல்.24 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்திருந்த நிலையில், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை திரும்பப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. ஆனால், பாஜக தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.Continue Reading

கேரளா வருகிறார் பிரதமர் மோடி

ஏப்ரல்.24 இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று கேரளா வருகிறார். நாளை திருவனந்தபுரத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். கேரளாவுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை மத்தியபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி வருகிறார். இதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார்.Continue Reading

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்

ஏப்ரல்.24 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடவுள்ள இறுதிவேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 3Continue Reading

சுற்றுலாப் பயணிகளைத் துரத்திய காட்டுயானை

ஏப்ரல்.23 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானையை படம்பிடிக்க முயன்றவர்களை, அந்த யானை துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர்,செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது போல இந்த ஆண்டும் காய்த்துள்ளது. இதனால் காட்டுContinue Reading