ஜூன்.1 தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும்(ஜூன்.1), நாளை(ஜூன்.2)யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.Continue Reading

ஜூன்.1 சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்கவும், தேவைப்பட்டால் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலும் இங்கு தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்று விளங்கும் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தற்போது அதிநவீன வந்தே பாரத் ரயில்Continue Reading

ஜூன்.1 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று நேரில் சந்திக்கிறார். அப்போது, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோருவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்Continue Reading

ஜூன்.1 தமிழக அரசை கலந்தாலோசனை செய்யாமல் ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக செயல்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். இதில், 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசியContinue Reading

ஜூன்.1 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதுஷா நாயகம் தர்ஹாவில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்பட்டுவருகிறது. இந்தாண்டு 849-வது சந்தனக்கூடு திருவிழா மே 21-ம் தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டுContinue Reading

ஜூன்.1 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா என சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்Continue Reading

மே.31 சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் 9 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தமிழகம் திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளா்களை அழைப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான்Continue Reading

மே.31 தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரத்தால் கடுமையான வெயில் வாட்டியெடுத்தது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்திய நிலையில், அவ்வப்போது பல இடங்களில் மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தContinue Reading

மே.31 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்து நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ள ராகுல்காந்தி, அந்நாட்டில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய ராகுல்காந்தியை, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் சாம் பிட்ரோடா வரவேற்றார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை எனப் போற்றப்படுபவர் ஆவார். இந்த 10 நாள் சுற்றுப்பயணத்தின்போது, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்Continue Reading

மே.31 மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, மல்யுத்த வீராங்கனைககள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டத்தை விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிமாக கைவிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களிடம் பாலியல்Continue Reading