முதுமலையில் வாகனங்களைத் துரத்திய காட்டுயானை

ஏப்ரல்.18 நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி – தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர தொடங்கி உள்ளன. அந்த வகையில், முதுமலைக்குள் உள்ள பிரதான சாலைகளில் யானைகள் நடமாட்டம்Continue Reading

தாராபுரத்தில் கஞ்சாவுடன் பிடிபட்ட இளைஞர்

ஏப்ரல்.18 திருப்பூர் அருகே தாராபுரத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, காரில் கடத்திவரப்பட்ட 5.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாழப்பாடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டாடா இண்டிகா என்ற வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.Continue Reading

தர்பூசணி சாகுபடி - விவசாயிகள் கவலை

ஏப்ரல்.18 திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, கோடையில் வெயிலால் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுப்பகுதியிகளில் கோடை சீசனை கணக்கில்கொண்டு விவசாயிகள் ஆண்டுதோறும் தர்பூசணி சாகுபடி செய்துவருகின்றனர். கிணற்றுபாசனத்தை வைத்து விவசாயிகள் தர்பூசணியை பரவலாக சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் வீணாவதைத்தடுக்கும் வகையில், தர்பூசணிக்காக பார் எனப்படும் மேட்டுப்பாத்தி அமைத்து, நீர் ஆவியாகாமல் தடுக்க நிலப்போர்வை போர்த்திContinue Reading

மாமல்லபுரத்தில் இன்று கட்டணம் இல்லை

ஏப்ரல்.18 உலக பாரம்பரிய தினத்தையொட்டி, இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதனContinue Reading

மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் அமல்

ஏப்ரல்.18 கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவித்துள்ளார். கோடை விடுமுறை வருவதால் வரும் நாட்களில் ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்டContinue Reading

துப்புரவு பணியாளராக மாறிய பெண்கவுன்சிலர்

ஏப்ரல்.18 கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததால், அதிருப்தியடைந்த பெண் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர், தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சிContinue Reading

துபாய் தீவிபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

ஏப்ரல்.18 துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். துபாய் நாட்டின் தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். கட்டிடத்தின் 4-வது மாடியில் ஏற்பட்ட தீ,Continue Reading

பல்வீர்சிங்மீது வழக்குப்பதிவு

ஏப்ரல்.18 திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பணியாற்றிவந்த பல்வீர் சிங், அப்பகுதியில் சின்ன குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரும்பொழுது, அவர்களின் பற்களை பிடுங்கியும், வாயில் ஜல்லி கற்களை போட்டும் கொடூரமான தண்டனை வழங்கி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சிContinue Reading

புஸ்லி ஆனந்த் பேட்டி

ஏப்ரல்.18 சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 257வது பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின்பிறந்த நாளை ஆண்டுதோறும் ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தீரன் சின்னமலையின் 257வது பிறந்தநாளையொட்டி, அவர் பிறந்த இடமான, ஈரோடுContinue Reading

சிஐடியு தொழிற்சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு

ஏப்ரல்.18 தமிழகத்தில் போக்குவரத்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாதம் 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சிஐடியு சங்க மாநில சம்மேளன குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌந்திரராஜன்,Continue Reading