கோவையில் செந்தில்பாலாஜி பேட்டி

ஏப்ரல்.15 தேர்தல் ஆணையத்தில் கொடுத்த சொத்து ஆவணங்களைத் தொகுத்து பட்டியல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என்னைப் பற்றிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார், முதலமைச்சரின் அனுமதிபெற்று அவர்மீது நானே வழக்குத் தொடரவுள்ளேன் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பில் எனContinue Reading

குழந்தை தத்தெடுப்பு -மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

ஏப்ரல்.15 வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண் ஒரு குழந்தையை தத்தெடுக்க தகுதியுடையவர்தான் என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நீதிமன்றத்தில், ஷப்னம்ஜகான் அன்சாரி(வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க உரிமை கேட்டு விண்ணப்பித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஷப்னம் ஜகான் அன்சாரி விவகாரத்து பெற்றவர் மட்டுமின்றி அவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். எனவே, அவரால்Continue Reading

ரபேல் வாட்ச் பில் - வானதி சீனிவாசன் பதில்

ஏப்ரல்.15 அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் குறித்து கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.எல். ஏ வானதி சீனிவாசன், பில் தானே கேட்டீர்கள்..அது வந்ததா இல்லையா?.. சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக “ஆலயம்” எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காந்திபுரம்Continue Reading

சிஆர்பிஎப் தேர்வு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்ட அறிவிப்பு

ஏப்.15 மத்திய ரிசர்வ் காவல்படை (சி.ஆர்.பி.எப்)-ல் காலியாகவுள்ள பதவியிடங்களை நிரப்ப நடத்தப்படும் கணினி வழி எழுத்தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வலியுறுத்தி, சென்னையில் வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,223 பதவியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கு கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்Continue Reading

மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது

ஏப்ரல்.15 தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையிலான கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, குறிப்பிட்ட தடைக்காலத்தில்Continue Reading

முதலையிடம் சண்டையிட்ட காட்டுயானை

நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் முதலை இருந்த குளத்தில் குட்டியுடன் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு யானை ஒன்று, முதலையிடம் சிக்கிய குட்டியை பாதுகாக்க போராடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தமிழத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கேரள மாநிலம் வயநாடு வனவிலங்கு சரணாலயம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகிய மூன்று மாநில வனப்பகுதியின் எல்லையில் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிகளில்Continue Reading

துப்பாக்கிச் சூட்டில் பலியான ராணுவ வீரர்கள் - இன்று இறுதிச்சடங்கு

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 வீரர்களின் உடல் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டது. கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு தனித்தனியே வந்த 2 வீரர்களின் உடலும், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், சேலம்Continue Reading

கோவையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு

கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வழங்கினர். கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து, அனைத்து சமயத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்Continue Reading

சாலை தடுப்பில் லாரி மோது விபத்து

ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மேல் ஏறி விபத்துக்குள்ளானது. இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் இன்று அதிகாலை சென்னை துறைமுக பகுதியிலிருந்து வெள்ளை ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றி கொண்டு வந்த கனரக லாரி ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தContinue Reading

ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள், ஆட்கள் வந்ததைக் கண்டு தப்பியோடினர். காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனமான இண்டிகேஷ்(INDICASH) என்கிற ஏடிஎம் மையமானது அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரு ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது, அப்பகுதியில் ஆள்Continue Reading