விசில் போடு எக்ஸ்பிரஸ் பதிவு தொடக்கம்

சென்னையில் வரும் 30ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியை இலவசமாகக் காண குமரி முதல் சென்னை வரை இயக்கப்படும் விசில்போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிContinue Reading

பொள்ளாச்சி குடிபோதையில் ரகளை செய்த இளைஞர்

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தையால் திட்டி பணிசெய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை கண்ட போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதனால்,Continue Reading

திருப்பூரில் போலி கிளினிக்கிற்கு சீல்

திருப்பூர் அருகே சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கரட்டாங்காடு பகுதியில் அனுமதியின்றி முறைகேடாக நடத்தப்பட்டுவந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் இயங்குகின்ற மருத்துவமனைகள் மற்றும்கிளினிக்குகள், மருந்தகங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் யஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார் வந்தது. அது குறித்துContinue Reading

தாராபுரம் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர் பசுபதி, மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வாகியுள்ளார். சென்னையில் அண்மையில் மாநில அளவிலான இலக்கிய மன்றப்போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 8 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த போட்டிகளில், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பசுபதியும் பங்கேற்றார். அதில்,Continue Reading

கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதை எல்லாம் நீக்கி விடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களை நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்து வைத்து பேசினால் அதனை நீக்கி விடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என தொடர்ந்து குரல்Continue Reading

தமிழ்புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோடி பேச்சு

உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, டெல்லியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆண்டு தோறும் தனது இல்லத்தில் புத்தாண்டு விழாவை நடத்தி வருகிறார்.அந்த வகையில், தமிழ் புத்தாண்டையொட்டி டெல்லி காமராஜ் லேன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சர்Continue Reading

ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீன் நீட்டிப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கான ஜாமீனை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் தமது பதவிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிContinue Reading

தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று காலை 10.15 மணிக்கு வெளியிடவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை சென்னை கமலாலயத்தில் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் கடந்த மாதம் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநிலத்தலைவர் அண்ணாமலை, “தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும். இதனை நான் வெளியிடும்போது, தமிழக மக்கள் இன்னும்Continue Reading

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது புகார் கொடுத்த இளம் பெண்களிடம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ. 30 வயதான இவர் பேச்சிப்பாறை பிலாங்காவிளை ஆகிய இடங்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இறுதியாக பணியாற்றிய பிலாங்காவிளை தேவாலயத்துக்கு வரும் இளம் பெண்களிடம் அவர்களின் சொந்த பிரச்சனைகளில் தலையிட்டு அதற்காகContinue Reading

இந்தியாவில் தற்போதுள்ள 30 முதலமைச்சர்களில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் (டெல்லி, புதுச்சேரி) முதலமைச்சர்கள் பதவி வகித்துவருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்துவருவதால் அங்கு முதலமைச்சர் இல்லை. இந்நிலையில், தற்போது பதவியில் உள்ள இந்த 30 முதல்வர்களும்Continue Reading