கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கோவிலின் உள்ளே வழிபடச் செல்லும், தான் அணிந்திருந்த காலணியை கழட்டி, உதவியாளரிடம் கொடுத்து எடுத்துச் செல்லக்கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வருகின்ற 18ஆம் தேதி சாகை வார்த்தை நிகழ்ச்சியுடன் தொடங்கவுள்ளது. மே மாதம் 2ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியானContinue Reading

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்திவருகிறது. மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாக குற்றம்சாட்டிய மாணவிகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்புContinue Reading

கேரளா மாநிலம் வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, எம்.பி. பதவி, வீடு, அடையாளம் ஆகியவற்றை வேண்டுமானால் பாஜக எடுத்துக்கொள்ளலாம், சிறையில் அடைக்கலாம் ஆனால் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு அண்மையில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிContinue Reading

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவர்கள், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 31 முதுகலைப்பட்டதாரிகள், 8 பெண்கள் உட்பட மொத்தம் 189 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி, ஏப்.20ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புContinue Reading

தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏப்.11 முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடுமையான வெயில்Continue Reading

தனி நபர் நடிப்புப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, துபாய் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த திருநங்கை மாணவி அஜிதாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வியைத் தாண்டி தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை நுண்கலை, விளையாட்டு, அறிவியல், இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பு 2022-23ம் கல்வியாண்டில், சிறந்துContinue Reading

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டுமென கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அளித்த சுவாரஷ்யமான பதிலால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை நீடித்தது. தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரத்யேக பாஸ் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400Continue Reading

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் பாகுபாலி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமம் மேட்டுப்பாளையம்-வனப்பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள நெல்லிமலை வனப்பகுதியிலிருந்து தினமும் உணவு, குடிநீர் தேடி காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்டContinue Reading

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வழி செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். தடையை மீறி இந்த விளையாட்டை விளையாடுவோருக்கான தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை பேரவையில் அமைச்சர் ரகுபதி 2022 அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்தார். அது பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர்Continue Reading

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேசிய கட்சிக்கான தகுதியை இழந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி முதலில் டெல்லியில் ஆட்சியை பிடித்தது. பின்னர் படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கால்பதிக்க தொடங்கியது. பஞ்சாப்பில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைContinue Reading