மே.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் மரணமடைந்தது தொடர்பாக தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென அவரது தாயார் செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தார். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்து அந்தப்Continue Reading

மே.30 திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.Continue Reading

மே.30 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த 27ம் தேதி நுழைந்த அரிக்கொம்பன் யானை தாக்கியத்தில் காயமடைந்த பால்ராஜ் என்ற நபர், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ‘அரிக்கொம்பன்’ என்ற காட்டு யானை வலம் வந்தது. இந்த யானை அங்குள்ள ஊருக்குள் புகுந்து 8 பேரை கொன்றதுடன், விளை நிலங்களை சேதப்படுத்திContinue Reading

மே.30 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 15ம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைக்கவுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Continue Reading

மே.30 ஐப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அந்நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.819 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சென்னையில் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.அதன்படி, கடந்த 23-ந் தேதியன்று சிங்கப்பூர் சென்றContinue Reading

மே.30 ஆமதாபாத்தில் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லீக்Continue Reading

மே.30 தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.Continue Reading

மே.30 தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அந்த மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும்படி மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆட்சிக்காலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துடன் முடிகிறது. அதன்படி, மிசோரமில் மாநில சட்டசபை ஆட்சிக்காலம் வருகிற டிசம்பர் 17-ந் தேதியோடு முடிவடைகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார்Continue Reading

மே.29 அசாம் மாநிலத்தின் முதல் வந்தேபாரத் ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டுவருகிறது. அதன்படி, நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவையை மாநிலங்கள் தோறும் படிப்படியாக அறிமுகம் செய்துவருகிறது. தமிழகம், கேரளா, மும்பை என பல மாநிலங்களில் ஏற்கனவே இந்த வந்தே பாரத் ரயில்Continue Reading

மே.29 தமிழகத்தில் நடைபெற்ற விஷசாராய மரணங்கள், சட்டம்ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு அதிமுக சார்பில் இன்று நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயணம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. அதேபோல், திமுக ஆட்சியில் தமிகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், இந்த பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டContinue Reading