உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சின்னவெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனதில் இரு சீசன்களில், சின்ன வெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில், சாகுபடி செய்யப்படுகிறது. பிற காய்கறி சாகுபடியை விட இந்த சாகுபடிக்கு, அதிக செலவாகிறது. அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்Continue Reading

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2ம் கட்ட அகழாய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீContinue Reading

தொடர் விடுமுறையால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசன டோக்கன் பெற ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக திருமலையில் ஏழுமலையானை தரிசன செய்ய திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் உள்ள இலவச தரிசனம் டோக்கன் அளிக்கும் மூன்று இடங்களிலும் அதிகாலையிலிருந்து மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச்செல்கின்றனர். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலையில் இருக்கும்,Continue Reading

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ். ஜாவலியை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகContinue Reading

சென்னை தரமற்ற செருப்பை விற்பனை செய்த கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் இராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வடசென்னை காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஏகே மணி(வயது53). இவர் கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ராயபுரத்தில் அமைந்துள்ள ஜம்ஜம் செருப்பு கடையில் ஒருஜோடி செருப்பை ஒன்றை தனக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த செருப்பை கடந்த 5 நாட்களுக்கு முன்னராகதான் பயன்படுத்தியுள்ளார். அந்த செருப்பை அணிந்தContinue Reading

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சொத்து பிரச்சனையில் தம்பி மனைவியை ஓடும் பேருந்தில் குத்திக்கொன்றுவிட்டு தப்பியோடிய அண்ணனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேனி(வயது42). தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் ராஜாங்கத்துக்கும்Continue Reading

கன்னியாகுமரியில் பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியர் ஆன்டோ மீது இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனட்டிக் ஆன்டோ (வயது 29). இவர் குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக இருந்தார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்குContinue Reading

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வனத்துறை அலுவலகப் பெண் பணியாளரின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பைக்கில் வந்த நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மானந்த வாடி பகுதியில் உள்ள சாலையில் அதே பகுதியை சேர்ந்த ரோஸ்லின் ஜோசப் என்ற இளம் பெண் ஆனந்தவாடி வனத்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.Continue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பல வகையான கருத்துகளை வெளியிட்டதால் அண்மைக்காலமாக இரு தரப்பினரிடையே பிரச்சனை இருந்துவருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பேசி முடிவு செய்ய வேண்டியContinue Reading

சென்னையில் வரும் 16ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், செயற்குழு கூட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16-ம் ஞாயிற்றுக்கிழமை பகல்Continue Reading