கோவையில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான குறும்பட விழா நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் டி.பிருந்தா தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஏ.அங்குராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் கலந்துகொண்டார். விழாவில் பேசியContinue Reading

கோவை- சென்னை இடையேயான இயக்கப்பவுள்ள அதிகவேக வந்தே பாரத் ரயில் சேவைக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முதல் அதிவேக ரயிலான வந்தேபாரத் ரயிலின் சேவையை நாளை (ஏப்.8) பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இதனிடையே, சென்னை-கோவை இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலானது கோவை- சென்னை இடையே புதன்கிழமைContinue Reading

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை மறுநாள் (ஏப்.9) பிரதமர் நரேந்திர வருவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புலிகள் பாதுகாப்பு திட்டம்தொடங்கியதன் 50-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக வருகின்ற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் செல்கிறார். அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் அவர் வரவுள்ளார். அதன்படி, வரும் 9-ந்தேதி காலை 9.35 மணிக்குContinue Reading

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த 41 வயதான ஆண் ஒருவருக்கு அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ,மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைContinue Reading

நாடு முழுவதும் அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் தொற்று பாதித்த 25,587 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்களில் 2,826 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும்Continue Reading

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால், புதிதாகப் போடப்பட்ட சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் வழுக்கி அடுத்தடுத்து விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி என்னும் நகர பகுதியை இணைக்கும் கக்கோடி கிராம சாலை அண்மையில் புதிதாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வந்தது. அப்போது அந்த சாலை வழியாக இருசக்கரContinue Reading

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரர்.3-ம் தேதிவரை நடைபெற்றுமுடிந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் நேற்றுடன் (ஏப்ரல்.5) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடத்Continue Reading

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏவாக முறைப்படி பதவியேற்றுக்கொண்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால்,சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்Continue Reading

தென்காசியிலிருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமளவங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், புளியரை சோதனை சாவடியில் சிறப்பு தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இருப்பினும், விதிகளை மீறி சட்டவிரோதமாக, ஏராளமான லாரிகளில் தென்காசி மாவட்டத்திலிருந்துContinue Reading

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மூணார் சாலையில் உலா வந்த காட்டுயானை, சாலையில் சென்ற வாகனங்களைத் தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணார் சாலையில் நடுரோட்டில் நின்ற காட்டு யானை (கொம்பன்) முன்பக்கத்தில் கொம்பினால் குத்தியதில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைப்பேட்டைக்கு சென்ற அமீன் என்பவர், டிப்பர்லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது, உடுமலைப்பேட்டை சின்னார் வனப்பகுதியில் நடுரோட்டில்Continue Reading