மே.24 நாடு முழுவதும் நடத்தப்பட்ட 2022ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வை தமிழ் மொழியில் எழுதி தேர்ச்சி பெற்று தென்காசி இளைஞர் சுப்புராஜ், அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிக்கு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்குContinue Reading

மே.24 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 16வது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச்சுற்று போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றிபெற்றது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின. ‘டாஸ்’Continue Reading

மே.24 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தமிழக-ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 27ஆம்Continue Reading

மே.24 ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் புதிதாகத் திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு சிட்னி சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் இந்திய கலைஞர்களின் வண்ணமயமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் விமானத்தின் புகை மூலமாக ‘வெல்கம் மோடி’ என எழுதியும் சிறப்பாக வரவேற்றனர். சிட்னி நகரில் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துContinue Reading

மே.24 இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நடப்பாண்டில் 43 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிபெற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஓராண்டில் உள்நாட்டு விமான சேவை மூலம் 5 கோடியே 39 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு உடான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வகுத்து தீவிரமாக விமான நிலையங்கள், சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டுContinue Reading

மே.23 சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட 5500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Continue Reading

மே.23 தமிழகம் மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், சுற்றுச்சூழலை கெடுத்து, மிகக் குறைந்த அளவில் மட்டும் மின்சாரத்தை வழங்கும் என்.எல்.சி நிறுவனத்தை தமிழகத்தில் அனுமதிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு தேவைக்கும் கூடுதலாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாகவும், கடந்த 19-ஆம்Continue Reading

மே.23 சென்னையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை தொட்டுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர்Continue Reading

மே.23 பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டின் அலுவல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்நாட்டு பிரதமருடன் சேர்த்து கூட்டாக வெளியிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதலில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு சென்ற வஅர், ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர்Continue Reading

மே.23 நாடு முழுவதும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதேநேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தால் பான் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி அண்மையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, புழக்கத்தில் இருந்துContinue Reading